பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை கவரும் 'சிவப்பு சீமாட்டி': விளைச்சலில் மிரட்டும் ஒட்டுரக பப்பாளி

Added : பிப் 14, 2020
Advertisement
 விவசாயிகளை கவரும் 'சிவப்பு சீமாட்டி': விளைச்சலில் மிரட்டும் ஒட்டுரக பப்பாளி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் வழக்கமான பயிர் சாகுபடியை விட்டு, மாற்று முயற்சியில் ஆர்வம் காட்டும் விவசாயிகளின் தேர்வாக உள்ளது, 'ரெட் லேடி' எனும் ஒட்டு ரக பப்பாளி.பொள்ளாச்சியில் இளம் தலைமுறை விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியை முயற்சிக்கின்றனர்.இன்றைய இளம் விவசாயிகளின் விருப்ப தேர்வாக உள்ளது ஒட்டுரக பப்பாளி ரகமான 'ரெட் லேடி'. மருத்துவ குணங்களுக்காக பப்பாளிக்கு சந்தையில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அறுவடைக்கு பிறகு ஒரு வாரம் வரை வைத்து விற்கலாம்.கண்ணை கவரும் பளிச்சிடும் சிவப்பு நிறம், நாவை சுண்டி இழுக்கும் இனிப்பு சுவை போன்ற காரணங்களுக்காக வியாபாரிகளும், நுகர்வோரும் 'ரெட் லேடி'க்கு அதிக வரவேற்பு அளிக்கின்றனர்.'ரெட் லேடி' சாகுபடி செய்து, லாபம் பார்க்கும் விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கரில், 900 - 1,000 நாற்றுகள் வரை நடவு செய்யலாம். நாற்று பண்ணைகளில் ஒரு நாற்று, 12 - 15 ரூபாய்க்கு விற்கிறது. உழவு செய்து, ஏக்கருக்கு ஒரு டன் தொழு உரமிட்ட நிலத்தில், ஒரு அடிக்கு ஒரு அடி குழி அமைத்து, நுண்ணுயிர் கலவை இட்டு நடவு செய்யலாம். செடிக்கு செடி, ஏழ அடி இடைவெளி நல்லது. பாசனத்துக்கு சொட்டு நீர் சிறந்தது.நடவு செய்த, 20வது நாள் களை எடுத்து, ஏக்கருக்கு, 150 கிலோ பேரூட்ட சத்துகள் இட வேண்டும். அதன் பின், பாசனம் மட்டுமே போதும். எட்டாம் மாதம் அறுவடைக்கு தயாராகும். மாதா மாதம் உரம் கொடுத்தால், காய்கள் திரண்டு எடை கூடும்; எண்ணிக்கையும் அதிகரிக்கும்.நடவில் இருந்து, 22 மாதங்கள் அறுவடை செய்யலாம். பராமரிப்பையும், மண் வளத்தையும் பொறுத்து, 40 முதல், 80 டன் வரை ஏக்கருக்கு மகசூல் கிடைக்கிறது.வியாபாரிகள் தோடத்துக்கே வந்து கொள்முதல் செய்து கொள்கின்றனர். ஒரு ஆண்டு பராமரித்தால், அதற்கடுத்த ஒரு ஆண்டு தினசரி வருவாய் கிடைக்கும். கிலோ, ஏழு ரூபாய் முதல், 12 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. தண்ணீர் தேங்காத மண்ணில் தைரியமாக பயிரிடலாம். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.பப்பாளியில் மேலாண்மை!பயிரை அதிகம் தாக்கும் மாவு பூச்சியை கட்டுப்படுத்த, எதிர் ஒட்டுண்ணி விடுதல், இலைசுருட்டு புழு, வெள்ளை ஈக்கள், பழ அழுகல் பிரச்னைகளுக்கு 'ஆன்டி - வைரஸ்' மருந்து தெளித்தல், வேர் நோய்களை விரட்ட செடிக்கு, 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு கொடுத்து வந்தால், பள பள பப்பாளியை, சேதாரமின்றி அறுவடை செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X