பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலம் கிலோ ரூ.103.35

Added : பிப் 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில், கொப்பரை கிலோ, 103.35 ரூபாய்க்கு விற்பனையானது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நெகமம், எம்மேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, சின்னநெகமம் பகுதியில் இருந்து, 48 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வாணி தலைமையில் ஏலம் நடந்தது. இதில், 25 மூட்டைகளில் இருந்த முதல் தர கொப்பரை கிலோ, 98.35 முதல், 103.35 ரூபாய்க்கு விற்பனையானது.இரண்டாம் தர கொப்பரை, 23 மூட்டைகள் கிலோ, 60.35 முதல், 64.35 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய ஏலத்தின் மொத்த வர்த்தகம், 95 ஆயிரம் ரூபாய் ஆகும். ஏலத்தில், 15 விவசாயிகள், ஏழு வியாபாரிகள் பங்கேற்றனர்.கொப்பரை வரத்து அதிகரிக்கும் வகையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர், கொப்பரை உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து, ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.கொப்பரை ஏலத்தில் பங்கேற்றும் உற்பத்தியாளர்கள், 98946 87827 என்ற மொபைல் எண்ணில், விற்பனைக்கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X