பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement
 காஞ்சிபுரத்தில் சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையின நல ஆணைய தலைவர் ஜான்மகேந்திரன் தலைமையில், சிறுபான்மையினருக்கான ஆலோசனை கூட்டம், நடந்தது.

இக்கூட்டத்தில், சிறுபான்மையின நல ஆணையத்தின் உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட எஸ்.பி., சாமுண்டீஸ்வரி மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் என, பலரும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர், தங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை மனுவாக தெரிவித்தனர். சிறுபான்மையினர், தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்தனர்.

கோரிக்கை

கூட்டுறவு துறை இணை மானியம் வழங்கு வதில் தாமதம் செய்வதாகவும், ஜெயின் சமூகத்தினர் புனித யாத்திரை செல்ல மானியம் வழங்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.மேலும், புத்தஒளி பன்னாட்டு பேரவையின் மாநில ஆலோசகர் வீரமணி என்பவர், காஞ்சிபுரத்தில் போதி தர்மர் தியான பள்ளி அமைக்க கோரிக்கை விடுத்தார்.

நடவடிக்கை

சிறுபான்மையினர்களின் கோரிக்கைகள் தெரிவித்த பின், 75 பேருக்கு உதவித்தொகையும், 14 பேருக்கு, தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி முடிவில், சிறுபான்மையின நல தலைவர் ஜான் மகேந்திரன் கூறியதாவது:எட்டு மாவட்டங்களில், இது போன்ற கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறுபான்மையினருக்கான சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.பராமரிப்பு இன்றி உள்ள, சமணர் கோவில் குறித்து ஆணையத்திடம் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X