பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ஊடுபயிராக வாழை: இயற்கை விவசாயத்தில் பழங்குடியினர் ஆர்வம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த பழைய சர்க்கார்பதி பழங்குடியினர், தென்னையில் வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனைமலை அடுத்த பழைய சர்க்கார்பதியில், 130க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்காக வனத்துறை சார்பில், 39 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டன.தென்னை, வாழை, தட்டை, கொள்ளு உள்ளிட்ட பயறு வகைகள்.பயிர்கள், நிலக்கடலை, செண்டு மல்லி, கோழிக்கொண்டை பூ வகைகள் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர்.இதில், சிறப்பு என்னவென்றால் பழங்குடியினர், எவ்வித ரசாயனமும் பயன்படுத்தாமல், இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் சார்பில், உயர் விளைச்சல், நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இடுபொருட்கள் இலவசமாக வழங்கினர்.இந்நிலையில், பயறு வகைகள், நிலக்கடலை அறுவடை முடிந்து தற்போது, பூவன், கதளி உள்ளிட்ட வாழை ரகங்களை சாகுபடி செய்து உள்ளனர். அதிலும், தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து உள்ளனர்.தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது: பழங்குடியினர் ரசாயனத்தை தவிர்த்து, மண்புழு உரம், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் என பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்தி, பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.இதனால், மண் வளமாக இருப்பதுடன், பயிர்கள் ஆரோக்கியமாக வளர்கிறது. விளைவிக்கும் பொருட்களை, கிராமத்துக்கு வந்து வியாபாரிகளே நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் என்பதால், அதிக விலைக்கு விற்பனையாகிறது. சீசனுக்கு தகுந்தாற்போல், பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, வாழை சாகுபடி செய்து உள்ளனர். பழங்குடியினருக்கு மண்புழு உரம், தோப்பில் வீணாகும் கழிவுகளில் உரம் தயாரித்தல் என பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். அவர்களே தங்களுக்கு தேவையான உரத்தை தயாரித்து வருகின்றனர். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X