பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பில் இளங்குருத்து புழு மூடாக்கு அமைக்க 'அட்வைஸ்'

Added : பிப் 14, 2020
Advertisement

உடுமலை;வறண்ட வானிலை காரணமாக, கரும்பு சாகுபடியில் இளங்குருத்து புழு தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூடாக்கு அமைக்க வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெல்லம் உற்பத்திக்காக, கரும்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. போடிபட்டி, பள்ளபாளையம், சுண்டக்காம்பாளையம் பகுதிகளில், இச்சாகுபடி பிரதானமாக உள்ளது. கோடை காலத்தில், கரும்பு சாகுபடியில், பல்வேறு நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. இதனால், கரும்பின் பிழிதிறன் பாதிக்கப்பட்டு, வெல்ல உற்பத்தியும் குறைகிறது.தற்போது, உடுமலை சுற்றுப்பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ளது.இந்நிலையில், கரும்பு சாகுபடியில், தற்போதைய சீசனில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, கோவை வேளாண் பல்கலை, வேளாண்துறையின் உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், வரும், 16ம் தேதி வரை, சராசரியாக, 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இவ்வாறு, வறண்ட வானிலை நிலவுவதால், கரும்பில் இளங்குருத்து புழு தாக்க வாய்ப்புள்ளது. வயலை நன்கு ஈரமாக வைத்து கொண்டால், இத்தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். மேலும், பயிர் மூடாக்கும் செய்யலாம். இதனால், தாக்குதல் குறைவதோடு, தண்ணீர் தேவையையும் வெகுவாக குறைக்கலாம். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X