பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி:தென்கீரனுார் புறவழிச்சாலை மேம்பாலத்தில் உயர்கோபுர மின் கம்ப விளக்குகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றினை டி.எஸ்.பி., ராமநாதன் இயக்கி வைத்தார்.
சேலம் - சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சியில் இரு வழிச்சாலையாக உள்ள தென்கீரனுார் மேம்பாலத்தில் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கிறது. வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை உடைக்கும் சம்பவமும் நடந்தது.இப்பகுதியில் விபத்தினை தடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் தென்கீரனுார் மேம்பாலம் அருகே பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து விபத்தினை குறைக்கும் வகையில் தென்கீரனுார் மேம்பாலத்தில் 11 உயர் மின் கம்பங்களும், இரவு நேரங்களில் கற்களை வீசும் மர்ம நபர்களையும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் கண்காணிக்க 3 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு நேற்று இயக்கி வைக்கும் விழா நடந்தது.டி.எஸ்.பி., ராமநாதன் கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X