பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக புத்தாக்க திட்டம் அலுவலர்களுக்கு விளக்கம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 ஊரக புத்தாக்க திட்டம் அலுவலர்களுக்கு விளக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அரசு மற்றும் அரசு சாரா துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நடந்தது.

மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் தினகர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், கலெக்டர் பொன்னையா பேசியதாவது:

உலக வங்கி நிதி உதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் துவக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், ஊரக தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இத்திட்டமானது, தமிழகத்தின், 26 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3,994 ஊராட்சிகளில், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஐந்து வட்டாரங்களில், 220 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு வட்டாரங்களில், 101 ஊராட்சிகளிலும், செங்கல்பட்டில், மூன்று வட்டாரத்தில், 119 ஊராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அனைத்து அலுவலர்களும், இத்திட்டம் சிறப்பாக செயல்பட, முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.மேலும், இத்திட்டம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள, செங்கல்பட்டில் உள்ள ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X