பெரும்பதி பாலத்துக்கு விமோசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரும்பதி பாலத்துக்கு விமோசனம்

Added : பிப் 14, 2020
Share
 பெரும்பதி பாலத்துக்கு விமோசனம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அடுத்துள்ள பெரும்பதியில், மழை வெள்ளத்தால் வலுவிழந்து உடைந்த தரைமட்ட பாலம், விரைவில் சீரமைக்கப்படும் என, துணைச் சபாநாயகர் உறுதி அளித்தார்.பொள்ளாச்சி வடக்கு - கிணத்துக்கடவு ஒன்றியங்களை இணைக்கும் பெரும்பதி கிராமத்தை ஒட்டி, கேரளா நோக்கி வரட்டாறு செல்கிறது.இதன் குறுக்கே, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கான்கிரீட் தரைமட்டபாலம், பாதுகாப்பு சுவர் இல்லாமல் அமைக்கப்பட்டது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலங்களில், ஆற்றில் பாய்ந்து வரும் நீர், பாலத்தை கடந்து செல்வது வழக்கம். இதனால், பள்ளி மாணவர்கள், பெண்கள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்லும் நிலை நீடிக்கிறது. பாலம் வழியாக, புரவிபாளையம் சுற்றுப்பகுதியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிய வேன், குவாரி டிப்பர் லாரிகள் மற்றும் பஸ்கள் வந்து செல்கின்றன.மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் மேற்கு பகுதி, 10 அடி துாரம் சேதமடைந்துள்ளது.அச்சமடைந்த வாகன ஓட்டுனர்கள், உடனடியாக பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு மேற்கொண்டும், இதுவரை சீரமைக்கவில்லை.இச்சூழலில், இப்பகுதிக்கு வந்த துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாலம் இடித்த பகுதியை பார்வையிட்டு, புரவிபாளையம் - முத்துக்கவுண்டனுார் ரோடு அமைக்கும் பணியின்போது, பாலம் சீரமைக்கப்படும் என, பெரும்பதி மக்களிடம் உறுதி அளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X