வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., 2ம் இடம்

Added : பிப் 14, 2020
Advertisement

கிணத்துக்கடவு:வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அரசம்பாளையம் எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணி மாணவர்களை கல்லுாரி இயக்குனர் பாராட்டினார்.ஈரோடு, கொங்கு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் சென்டைஸ் - 2020 கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி நடந்தது. இதில், கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணி பங்கேற்று கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி அணியை 2 - 1 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.கால் இறுதி போட்டியில் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரி அணியை 2 - 0 என்ற செட் கணக்கிலும், அரையிறுதி போட்டியில் குமரகுரு பொறியியல் கல்லுாரி அணியை 2 - 0 என்ற செட் கணக்கிலும் வென்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.இறுதிபோட்டியில் கொங்கு பொறியியல் கல்லுாரி அணி, எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணியுடன் மோதி 2 - 0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடத்தையும், எஸ்.வி.எஸ்., அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.இரண்டாம் இடம் பிடித்த எஸ்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி மாணவர்களை, கல்லுாரி வளாக இயக்குனர் உதயசங்கர், முதல்வர் கண்ணன், உடற்கல்வி இயக்குனர் கார்த்திக் ராஜா, மகாலட்சுமி மற்றும் பயிற்சியாளர் செல்லமுத்து ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X