பொது செய்தி

தமிழ்நாடு

கண்புரை சிகிச்சை 11 முதியோர் தேர்வு

Added : பிப் 14, 2020
Advertisement

மதுராந்தகம்:கருங்குழியில் நடந்த கண் பரிசோதனை முகாமில், கண்புரை அறுவை சிகிச்சைக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

.மதுராந்தகம் ஒன்றியம், கருங்குழி சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், இலவச கண் பரிசோதனை முகாம், நேற்று நடந்தது.கருங்குழி அரிமா சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்த இம்முகாமில், அப்பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான முதியோர் பங்கேற்றனர்.

இதில், கிட்ட பார்வை மற்றும் துாரப்பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதற்கான ஆலோசனைகள் வழங்கி, கண் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், 11 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X