பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதங்களாக நடைபெறாத மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டத்தில் 3 மாதங்களாக நடைபெறாமல் நின்றுபோன மக்கள் தொடர்பு திட்ட முகாம் மீண்டும் நடைபெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கராபுரம் வட்டத்தில் வருவாய் துறை சார்பில் மாதம்தோறும் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வந்தது. மக்களைத் தேடி அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வந்ததால் கிராம மக்கள் இத்திட்டத்தால் பெரிதும் பயனடைந்து வந்தனர்.மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வயதான முதியவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம பொது மக்கள் முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோருதல் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை தருவர்.முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சங்கராபுரம் வட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற வில்லை. இதனால் பல்வேறு கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சங்கராபுரம் வட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெற கலெக்டர் கிரண் குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X