பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து வசதியுடன் விளையாட்டு மைதானம்: மாவட்ட கலெக்டர் ஆய்வில் உறுதி

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 அனைத்து வசதியுடன் விளையாட்டு மைதானம்: மாவட்ட கலெக்டர் ஆய்வில் உறுதி

பொள்ளாச்சி:''பொள்ளாச்சியில் மாணவர்களின் வசதிக்காக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்,'' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில், சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக சி.டி.சி., மேட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அதன்பின், காந்தி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து வியாபாரிகளிடம் குறைகளைகேட்டறிந்தார்.அப்போது, நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகளிடம், 'குடிநீர் முறையாக வழங்க வேண்டும்.அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கழிப்பிடங்களை நகராட்சி பணியாளர்கள் கொண்டு தினமும் துாய்மைப்படுத்த வேண்டும்,' என கலெக்டர் அறிவுறுத்தினார்.நகராட்சி மாட்டு சந்தை இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு, மின் விளக்குகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட தேவையான வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.காய்கறி சந்தை அருகே பயன்படுத்தப்படாமல் அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள கார்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.மேலும், நான்கு கோடி ரூபாய் செலவில் ஜோதிநகரில் கட்டப்படும் பூங்கா, அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.விடுதியில், தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுப்புறம் துாய்மையாக வைத்திருக்கவும்; மின்சார வசதி, மின்விசிறி வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.கலெக்டர் கூறியதாவது:திப்பம்பட்டியில் அனுமதியின்றி செயல்படும் மாட்டு சந்தை மீது நடவடிக்கை எடுக்கவும்; பொள்ளாச்சியில் மாட்டு சந்தை மீண்டும் இயங்கவும் நடவடிக்கைஎடுக்கப்படும்.கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தை புனரமைத்து மாணவியர் விளையாட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் பொள்ளாச்சி மாணவர்களின் வசதிக்காக, அனைத்து வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கைஎடுக்கப்படும்.ரோடு விரிவாக்கத்துக்காக அரசு மருத்துவமனை இடம் கையகப்படுத்தப்படுவது குறித்து, ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.மீண்டும் ஒரு முறை அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X