பொது செய்தி

தமிழ்நாடு

பிறப்பு, இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் அவதி

Added : பிப் 14, 2020
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் குழந்தைகள் பிறக்கும் மருத்துவமனைகளில் உடனுக்குடன் ஆன் லைன் மூலம் வழங்கப்படுகிறது. அதேபோல் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.ஆர்.எஸ்., என்ற இணையதள சேவையை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள 532 பேரூராட்சிகளில் திருக்கோவிலுார் உள்ளிட்ட பல பேரூராட்சிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கான சர்வரில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என கூறப்படுகிறது. எனினும் பேரூராட்சி நிர்வாகத்திடம் இதற்கான முறையான விளக்கம் எதுவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.அரசு அலுவலர்கள் இறந்தால் உடனடியாக அதற்கான தகவலை சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட அரசு கருவூலத்திற்கு தெரிவிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவினர் பல்வேறு பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று வருகின்றனர். அவ்வாறு கடன் பெறும்போது, கடன் பெறும் மகளிர் மற்றும் வருமானம் ஈட்டும் குடும்ப தலைவருக்கான காப்பீடு செலுத்துகின்றனர்.பயனாளி அல்லது அவரது குடும்ப தலைவர் உயிரிழந்தால் இரண்டு வாரத்திற்குள் அதற்கான சான்றிதழை கடன் பெறும் பைனான்ஸ் நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். அப்போதுதான் கடன் தள்ளுபடி செய்யப்படும். இரண்டு வாரத்திற்கு மேல் ஆனால், கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இறப்பு சான்றிதழ் கேட்டு செல்பவர்கள் பேரூராட்சி அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் கிடைக்க ஆன்லைன் வசதியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X