பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...காஞ்சிபுரம்

Added : பிப் 14, 2020
Advertisement

கொடூர் கிராமத்தில் துாய்மை பணி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கொடூரில், மார்க் சுவர்ணபூமி, மிடாஸ் கட்டடவியல் கல்லுாரி மாணவர்கள், நாட்டுநலப் பணிகளை, நேற்று முன்தினம் துவக்கினர்.கூவத்துார் போலீசார், பள்ளி மாணவ - மாணவியரிடம், பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து விளக்கி, அதை தவிர்க்க வலியுறுத்தி, ஒழிப்பையும் துவக்கினார். நலத்திட்ட மாணவ குழுவினர், கொடூரில் குவிந்திருந்த, பிளாஸ்டிக் குப்பையை அகற்றினர்.இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று, மருத்துவம், குடிநீர் சேமிப்பு குறித்து ஆலோசனை வழங்கி, மாணவர்களுக்கு, காகித பை தயாரிப்பு பயிற்சி அளித்தனர். 18ம் தேதி வரை, இம்முகாம் நடக்கிறது.

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில், கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டத்தில், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவது; ரயில்வே, எல்.ஐ.சி., வங்கிகள், போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத்துறை, தனியார் மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

174 பேருக்கு சைக்கிள் வினியோகம்

ஏகனாம்பேட்டை: வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டி, நேற்று வழங்கபட்டது. தலைமை ஆசிரியை சுகுணாதேவி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று, 174 மாணவியருக்கு, மிதிவண்டிகளை வழங்கினர்.

300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், நகராட்சி அதிகாரிகள், நேற்று, சோதனை நடத்தினர்.இதில், சுரேஷ், 28, என்பவர் கடையில் இருந்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர் போன்றவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடைக்காரருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு, 'சீல்' வைத்தனர்.'இந்த கடைக்கு, ஏற்கனவே மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், கடைக்காரர் கண்டுகொள்ளாததால், சீல் வைத்தோம்' என, அதிகாரிகள் கூறினர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

ஏனாத்துார்: காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது.நாம் சாப்பிடும் உணவில், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டியது குறித்து, வாலாஜாபாத் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதேபோல், உத்திரமேரூர் வட்ட சட்டப்பணிக்குழு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், 'போஷன் அபியான்' சார்பில், கம்மாளம்பூண்டி அங்கன்வாடி மையத்தில், வளர் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து சுகாதாரம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி இருதயராணி பங்கேற்று, பெண்களுக்கான சட்டம் குறித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X