பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் 23ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தி.மு.க., சார்பில் வரும் 23ம் தேதி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குப்பட்ட படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடத்தப்படுகிறது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள முகாமில் பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் அனைத்து வகை இளங்கலை, முதுகலை பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் பங்கேற்கலாம்.சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கி வரும் 35 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு கவுதமசிகாமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் அங்கையற்கண்ணி, உதயசூரியன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X