சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக விழா

Added : பிப் 14, 2020
Share
 சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு:மேலமையூர், ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது.

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் அக் ஷயா நகரில், தக் ஷிண ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது.இக்கோவிலில், சில மாதங்களாக, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களால், திருப்பணிகள் நடத்தப்பட்டன.சமீபத்தில், அப்பணி நிறைவடைந்ததை அடுத்து, 12ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, மங்கள மஹா கணபதி ஹோமம் நடந்தது.

நேற்று காலை, 6:30 மணிக்கு, சிறப்பு யாகம் நடந்தது; காலை, 9:00 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தக்ஷிண ஷீரடி சாய்பாபா, மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.விழாவில், செங்கல்பட்டைச் சுற்றியுள்ள, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X