பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி முருகா கல்லுாரியில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல்

Added : பிப் 14, 2020
Advertisement
 கள்ளக்குறிச்சி முருகா கல்லுாரியில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் அறிமுக உரயைாற்றினார். துணை முதல்வர் செல்வக்குமார் வரவேற்றார். சென்னை பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் ரங்கநாதன், உதவி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்கர் ஆகியோர் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறை மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் 95 மாணவர்களிடையே நேர்காணல் நடத்தியதில், 35 பேர் தேர்வாகினர். திறம்பட பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் வரும் ஜூன் மாதத்தில் சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர். நேர்காணல் ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் கந்தபிள்ளை, உடற்கல்வி இயக்குனர் வாசுதேவன், வேலை வாய்ப்பு அலுவலர் ரூபன் ஆகியோர் செய்திருந்தனர். துறை தலைவர் விஜயராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X