மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகளை காக்குமா வேளாண் துறை

Added : பிப் 14, 2020
Advertisement
 மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகளை காக்குமா வேளாண் துறை

உடுமலை:மக்காச்சோளத்தில், படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு மருந்துகளை வேளாண்துறை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்று பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும், மூன்றாம் மண்டல பாசனத்தில், 30 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நடப்பு முதலாம் மண்டல பாசனத்தில் பரவலாக இச்சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில், வளர்ப்பு தருணத்திலுள்ள மக்காச்சோளம் செடிகளில், படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. தண்டுபகுதியில், தங்கும், படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில், தண்டு பகுதி பாதித்து, செடிகள் சாய்கிறது; இலைகளையும் துளையிட்டு, வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது. இதனால், சாகுபடியில், பொருளதார சேதம் ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விழிக்குமா வேளாண்துறைகடந்த சீசனில், மக்காச்சோளம் சாகுபடியில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண்துறை சார்பில், பூச்சி மருந்து மானியத்தில் வழங்கப்பட்டு, தெளிப்பு மானியத்தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இதனால், பெரும்பாலான பகுதிகளில், படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. விளைச்சலும் ஓரளவு கிடைத்தது. நடப்பு சீசனிலும், தொழில்நுட்ப ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'குறைந்த நீர் தேவை உள்ள சாகுபடி என்பதால், மக்காச்சோளம் மட்டுமே பி.ஏ.பி., பாசன பகுதியில் உகந்ததாக உள்ளது.ஆனால், படைப்புழு தாக்குதல் தற்போதே துவங்கி வேகமாக பரவி வருகிறது. வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், விளைச்சல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது. இது குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X