பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் கடன் அட்டை பெற அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

விழுப்புரம்:பிரதமரின் விவசாயி கவுரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:பிரதமரின் விவசாயி கவுரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் கடந்த 8ம் தேதியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம்.ஏற்கனவே பெற்றுள்ள விவசாய பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர், வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெற தங்களது வங்கிக் கிளையை அணுகலாம். உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பிற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம்.திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்டத்தில் விவசாய பயனாளிகள் ஒருபக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X