சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: எஸ்.பி.,யிடம் சகோதரர் புகார்

Added : பிப் 14, 2020
Advertisement

விழுப்புரம்:தம்பியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சகோதரர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம், நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 34; இவர், எஸ்.பி.,யிடம் அளித்த மனு:என் சகோதரர் சதீஷ்குமார், 32; விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். கடந்த 8ம் தேதி காலை சதீஷ்குமார் ஸ்டாண்டில், ஆட்டோவில் அமர்ந்திருந்த போது, விழுப்புரம், மேற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் அங்கு வந்து, சதீஷ்குமாரிடம் ஆட்டோவை விட்டு இறங்காமல் திமிராக உட்கார்த்திருக்கிறாய் எனக்கூறி, அவர் வைத்திருந்த லத்தியால் சதீஷ்குமாரின் இடது கை மணிக்கட்டில் தாக்கினார்.இதனால், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுத்ததில், என் தம்பியின் இடது கை மணிகட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எந்தவித குற்றமும் செய்யாத என் தம்பியை தாக்கிய, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X