வீணாகும் தண்ணீர்

Added : பிப் 14, 2020
Advertisement

வெள்ளகோவில் - உப்புபாளையம் சாலை, ரெட்டை கிணறு ஸ்டாப்பில் காவிரிநீர் வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை மாற்ற வேண்டும்.- ஏ.கதிர்வேல், உப்புபாளையம்.2. திருப்பூர், அவிநாசி ரோடு, டி.டி.பி., மில் ரோட்டில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை மாற்றியமைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டும்.- ஏ.ஜெயராஜ், அவிநாசி ரோடு.3. திருப்பூர், முதல் ரயில்வே கேட் பின்புறம் எம்.ஜி.ஆர்., நகரில் குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிக் கொண்டே இருக்கிறது. சரிசெய்ய வேண்டும்.-- என்.கணேசன், ஊத்துக்குளி ரோடு.4. திருப்பூர், பெரியகடை வீதியில் இரு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.-எம். சாதிக்பாட்ஷா, பெரியகடை வீதி.5. திருப்பூர், - அவிநாசி ரோடு, அம்மாபாளையம் செக்போஸ்ட் அருகே, குழாய் உடைத்து குடிநீர் வீணாக செல்கிறது. உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவேண்டும்.- -எஸ்.முத்துமாரி, அம்மாபாளையம்.போலீசார் கவனத்துக்கு1. திருப்பூர், முனிசிபல் ஆபீஸ் வீதியில் கார்கள் பார்க்கிங் லைனை தாண்டி தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மற்ற கனரக வாகன ஓட்டிகள் செல்ல வழியில்லாததால், நெரிசல் ஏற்படுகிறது.- ஜி.ரவிச்சந்திரன், கருவம்பாளையம்.2.திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள புஷ்பா தியேட்டர் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில் பயணி அல்லாத மர்மநபர்கள் நாள் கணக்கில் படுத்துஉறங்குகின்றனர். போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.-எஸ்.மகாலிங்கம், பெரியார் காலனி.கால்வாய் அடைப்புதிருப்பூர், காட்டன் மார்க்கெட் - பூ மார்க்கெட் சந்திப்பில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது.- எம்.ஞானவேல், பல்லடம் ரோடு.கிடுகிடு மின்கம்பம்திருப்பூர் தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு, ஸ்டேட் பாங்க் எதிர்புறம் கம்பி துருப்பிடித்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.- எஸ்.செந்தில்மாணிக்கம், புதுார் பிரிவு.ரோட்டை சீரமைக்கலாமே!1. சிறுபூலுவப்பட்டி - 15 வேலம்பாளையம் செல்லும் ரிங்ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை மூடி சரிவர மூடாமல் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.- வி.செண்பகவல்லி, சிறுபூலுவப்பட்டி.2. திருப்பூர்-காலேஜ் ரோடு, மரக்கடை ஸ்டாப் முதல் சிக்கண்ணா கல்லுாரி ஸ்டாப் வரை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரைமக்க வேண்டும்.-ஏ.புவனேஸ்வரன், காலேஜ் ரோடு.3. திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, குண்டும் குழியுமாக, மோசமாக உள்ளது. போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. புதிய ரோடு போட வேண்டும்.-- கே.கார்த்திகேயன், அங்கேரிபாளையம்.வேகத்தடை அவசியம்திருப்பூர், பெரியாண்டிபாளையம் பிரிவு சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். வளைவில் வாகன ஓட்டிகள் வேகமாக திரும்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.-எம்.சுப்ரமணி, பெரியாண்டிபாளையம்.சிக்னல் பழுதுதிருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு, நல்லுார் நால்ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்ட சோலார் சிக்னல்கள் பழுதாகி ஒரு மாதமாகிறது. வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்று திரும்புகின்றனர். விபத்து அபாயம் உள்ளது.-கே.வேலுமணி, நல்லுார்.பணியை வேகப்படுத்துங்கதிருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் நடந்து வரும் பாலம் பணியை வேகப்படுத்த வேண்டும். வாகனங்கள் தினமும் மாற்றுப்பாதையில் சுற்றிச் செல்கின்றன.- ஆர்.ராஜேந்திரன், அணைப்பாளையம்.ஆக்கிரமிப்பு அகற்றுங்கதிருப்பூர், பி.என். ரோடு, சுப்பையா காலனி அங்கன்வாடி மையம் முன், தனியார் ஷெட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், அங்கன்வாடி இயங்க சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றவேண்டும்.--- கே.சிவானி,மேட்டுப்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X