நீர்நிலைகளில் கழிவுநீர் தடுக்க 'மாஸ்டர் பிளான்'

Added : பிப் 14, 2020
Advertisement

மதுரை, ''குளம், கால்வாய்களில் கழிவுநீர் சேரும் இடங்களை கண்டறிந்து தடுக்க 'மாஸ்டர் பிளான்' தயாராகிறது,'' என, மதுரை மண்டல சி.ஐ.ஐ., நடத்திய நீர் மேலாண்மை கருத்தரங்கில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் பேசினார்.மண்டல தலைவர் நாகராஜ் வரவேற்றார். துணை தலைவர் தியாகராஜன், முன்னாள் தலைவர் ராஜமோகன், ஐ.ஐ.டி., பேராசிரியர் மோகன் பேசினர்.கமிஷனர் விசாகன் பேசியதாவது: நகரில் ஒரு நபருக்கு தினமும் 90 முதல் 100 லிட்டர் தண்ணீர் வழங்குகிறோம். 100 லிட்டர் போதும் என்றாலும், 135 லிட்டர் வழங்க வேண்டும் என்பது விதி. இதற்காக முல்லைப்பெரியாறில் இருந்து கூடுதலாக 125 எம்.எல்.டி., குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது நிறைவுபெற்றால் தேவையை விட கூடுதல் நீர் கிடைக்கும். தினமும் 275 எம்.எல்.டி., பெறலாம். நீர் சிக்கனம் இல்லாததால் தினமும் கழிவுநீராக 80 சதவீதம் நீர் வீணாகிறது. இதை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் திட்டம் உள்ளது. தண்ணீர் வீணாவதை 90 சதவீதம் தடுக்கலாம். இதற்கு ஆலோசனை தரும் வல்லுநர்களை தேடுகிறோம். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க 'மாஸ்டர் பிளான்' ஒன்றை தயாரிக்கிறோம், என்றார். நியமன தலைவர் சதீஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X