சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement
 ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த பாளையகுஞ்சரம் கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து தரைப்பகுதி வரை தொங்கும் வேர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், தீ வைத்து எரித்துள்ளனர்.இந்த தீ மளமளவென, காய்ந்த நிலையில் இருந்த மரத்திலும் பிடித்து, கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீயை அணைக்க யாரும் வராததால், மரத்தின் மீதுள்ள தீ பல மணி நேரம் எரிந்து கொண்டிருந்தது.தகவலலறிந்த, உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் மரத்தின் சில பகுதிகள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X