மரக்கன்று பராமரிப்பதில் அலட்சியம் காய்ந்து, கருகி வீணாகும் நாற்றுகள்

Added : பிப் 14, 2020
Advertisement
 மரக்கன்று பராமரிப்பதில் அலட்சியம் காய்ந்து, கருகி வீணாகும் நாற்றுகள்

ஈக்காடு:திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊழியர்களின் அலட்சியத்தால், மரக்கன்று நாற்றுகள் காய்ந்து, கருகி வீணாகி உள்ளன.

திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில், மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வனத்துறை மட்டுமல்லாமல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 100 நாள் திட்ட பணியாளர்கள் மூலம், மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில், புங்கன், வேம்பு, புளி, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை, முறையாக பராமரிக்காததாலும், தண்ணீர் ஊற்றாததாலும், மரக்கன்றுகள் அனைத்தும், காய்ந்து, கருகி வீணாகி விட்டன.மேலும், துார் வாரப்பட்ட ஏரி, குளங்களைச் சுற்றிலும், பனை மரம் வைக்கவும், கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இதற்காக, வாங்கப்பட்ட பனங்கொட்டைகளும், இங்கு வீணாகி உள்ளன.

இதனால், அரசு பணம் வீணாவதுடன், 100 நாள் திட்ட பணியாளர்களின் உழைப்பும் விரயமாகி விட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, ஒன்றிய அலுவலகத்தில், மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்த்து, கிராமங்களில் நட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X