சர்வதேச கராத்தே போட்டி: அரசு பள்ளி மாணவர் அசத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement

பல்லடம்:உடுமலையில், கோஜிரியோ கராத்தே அமைப்பின் சார்பில், சர்வதேச கராத்தே போட்டி நடந்தது.இந்தியா, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், பல்லடம் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பல்வேறு பதக்கங்களை அள்ளினர்.அதில், கணபதிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தருணிஷ், 3 தங்கம், அருந்ததி, 2 தங்கம் ஒரு வெள்ளி, குமரகுருபரன் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, சாருமதி ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்றனர்.அதேபோல், கிழக்கு பல்லடம் நடுநிலைப் பள்ளி மாணவி நித்திய தர்ஷினி, இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியும் வென்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கணபதிபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரத்தினச்செல்வி, தனுசன் இந்தியா அறக்கட்டளை மேலாளர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X