பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிக் கிடந்த அவசர சிகிச்சை பிரிவு செயல்பாட்டிற்கு வந்தது

Added : பிப் 14, 2020
Advertisement
 பூட்டிக் கிடந்த அவசர சிகிச்சை பிரிவு செயல்பாட்டிற்கு வந்தது

திண்டிவனம்:திண்டிவனம் அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள, விரிவான அவசர சிகிச்சை பிரிவு, 'தினமலர்' செய்தி எதிரொலியால், செயல்பாட்டிற்கு வந்தது.
திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கண் அறுவை சிகிச்சை மையத்தை, கடந்த 30ம் தேதி முதல்வர் பழனிசாமி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.புதியதாக திறக்கப்பட்ட விரிவான அவசர சிகிச்சை பகுதியில், எலும்பு முறிவு சிகிச்சை, விபத்து கால அவசர சிகிச்சை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய, விரிவான அவசர சிகிச்சை பிரிவு, திறப்பு விழா கண்டு, 10 நாட்களுக்கு மேலாகியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதுபற்றி மருத்துவதுறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதும் துரித நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, அவசர சிகிச்சை பிரிவில் முறையாக திருஷ்டி பூசணிக்காய் உடைத்து நேற்று காலை முதல் செயல்பட துவங்கியது.
தொடர்ந்து புதிதாக 12 படுக்கைகள் அமைக்கப்பட்டு, ஆர்த்தே பிரிவு மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் அனைவரும், புதியதாக திறக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதே போல் ஆர்த்தே சிகிச்சைக்காக தனியாக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் அரசு மருத்துவமனையின் தலைமை அதிகாரி சாந்தகுமாரி, டாக்டர் வளவன், ஆர்த்தே டாக்டர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவர்கள், புதிய மருத்துவ பிரிவிற்கு மாற்றம் செய்யும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X