பொது செய்தி

தமிழ்நாடு

பி.இ.ஓ., ஆன்லைன் தேர்வு அதிகாரிகள் நியமனம்

Added : பிப் 14, 2020
Advertisement

மதுரை, மதுரையில் இன்று (பிப்.,14) நடக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) ஆன்லைன் தேர்விற்கான நோடல் அதிகாரியாக இணை இயக்குனர் ராமசாமி, கண்காணிப்பு அதிகாரியாக கன்னியாகுமரி சி.இ.ஓ., ராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.தொடக்க கல்வித்துறையில் 97 பி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப டி.ஆர்.பி., சார்பில் ஆன்லைன் தேர்வு இன்று (பிப்.,14) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மாநில அளவில் 64 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் மற்றும் அழகர்கோவில் லதா மாதவன் கல்லுாரி மையங்களில் இன்று தேர்வு நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு எதிரொலியை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக கல்வித்துறை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வு நடக்கும் போது மாவட்ட கண்காணிப்பாளராக அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்களும், தேர்வு மைய பொறுப்பாளராக டி.இ.ஓ.,க்களும் நியமிக்கப்படுவர். இத்தேர்வில் தற்போதைய சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுரை சி.இ.ஓ., சுவாமிநாதன் தர்மபுரி மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X