பொது செய்தி

தமிழ்நாடு

ராஜாங்குளத்தை சீரமைக்க அமைச்சர் ஆலோசனை

Added : பிப் 14, 2020
Advertisement
 ராஜாங்குளத்தை சீரமைக்க அமைச்சர் ஆலோசனை

திண்டிவனம்:திண்டிவனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும், ராஜாங்குளத்தை சீரமைப்பது குறித்து அமைச்சர் சண்முகம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டிவனம் மையப் பகுதியில் உள்ள ராஜாங்குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நிலத்தடி நீருக்கு ஆதராக விளங்கி வரும் இக்குளத்தை கடந்த சில நாட்களுக்கு முன், அமைச்சர் சண்முகம், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.இதில் ராஜாங்குளத்தை துார்வாரி சுத்தப்படுத்தி, குளத்தை சுற்றி பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் வகையில் வாக்கர்ஸ் பார்க் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் படி, திண்டிவனம் நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை நடந்த அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சண்முகம், ராஜாங்குளம் சீரமைப்பு குறித்து, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., கலால் ஆணையர் மோகன், நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ், பொறியாளர் பவுல்செல்வம் பங்கேற்றனர்.ஆய்வின் போது, ராஜாங்குளத்தை சீரமைப்பது, துார்வாருவது உள்ளிட்ட பணிகளுக்கு திட்ட முன்வடிவு தயார் செய்து, ஒரிரு நாளில் கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X