பொது செய்தி

தமிழ்நாடு

வாகன பார்க்கிங் வசூல் ரயில்வே ஸ்டேஷனில் 'ஜோர்': அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், 'கொர்ர்...'

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரு நுழைவுவாயில் உள்ளது. இரண்டாவது பிளாட்பார்ம் உள்ள புஷ்பா தியேட்டர் நுழைவுவாயில் முன் டூவீலர் பார்க்கிங் செய்ய நான்கு மணி நேரத்துக்கு பத்து ரூபாய். 12 மணி நேரத்துக்கு, 15 ரூபாய் 24 மணி நேரத்துக்கு, 20 ரூபாய், கார் நிறுத்த நான்கு மணி நேரத்துக்கு, 20 ரூபாய், 12 மணி நேரத்துக்கு, 50 ரூபாய், 24 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
டூவீலர் ஸ்டாண்டில் வாகனம் நிறுத்த, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஸ்டாண்டுக்கு வெளியே தற்காலிக பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த, 20 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.இப்படியிருந்தும்...ரயில்வே ஸ்டேஷனில் டூவீலர் ஸ்டாண்ட் நடத்துவதற்கான உரிமம் வழங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போதே, உரிமம் பெறுபவர் ஒப்பந்த காலம், புகார்கள் இருந்தால் தெரிவிக்க தொடர்பு எண், வாகனத்துக்கான கட்டணத்தை வாகன ஓட்டிகள் தெரிவிக்க அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்துகிறது.இதனை ஏற்று திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க ஒப்பந்தம் செய்த சோமசுந்தரம், செல்போன் எண்ணுடன் (96009 10992) கடந்த, 2017 முதல், நடப்பு ஆண்டு ஜூன், 29 வரை என ஒப்பந்த நிலவரத்தை தெரிவித்துள்ளார்.
அதில், 12 முதல், 24 மணி நேரத்துக்கு கட்டணம், 10 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படி ஒரு அறிவிப்பு இருந்தும், டோக்கன் அடித்து, அதில் கூடுதல் கட்டணத்தை ஒப்பந்தத்துக்கு மாறாக வசூலிக்கின்றனர். நான்கு மணி நேரத்தை விட ஐந்து நிமிடம் கூடுதலாக்கினால், 15 ரூபாய் வசூலிக்கின்றனர். இதனால், அடிக்கடி கட்டணம் வசூலிப்பவர் - வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பல்வேறு புகார், குற்றச்சாட்டு எழுந்த போதும், ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X