சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : பிப் 14, 2020
Advertisement

கண்மாயில் மூழ்கி பலி

மதுரை: விளாச்சேரி மொட்டமலை பர்மாகாலனியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கோபால் 38. நேற்று மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்று நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை திடீர்நகர் தீயணைப்பு குழுவினர் மீட்டனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
'போக்சோ'வில் வாலிபர் கைது

மதுரை: சோலையழகுபுரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி யிடம் திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக சோலையழகுபுரம் முதல் தெரு அய்யப்பன் நகரை சேர்ந்த பிரபுவை 27, டவுன் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

மதுரை: ஞானஒளிவுபுரம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் கவுதம் 23. இவர் கஞ்சாவை பதுக்கி விற்றதாக கரிமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 500 கிராம் கஞ்சா, ரூ.3100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபாட்டில்கள் கடத்தல்: 6 பேர் கைது

திருமங்கலம்: செக்கானூரணி சிவன் கோயில் எதிரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். வேனில் மாட்டுத்தீவனம் அடியில் மதுபாட்டில்களை கடத்தியது தெரிந்தது. பின்னால் வந்த காரிலிருந்தவர்களை விசாரித்த போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்க ஏற்றி செல்வது தெரிந்தது. வேன் டிரைவர் பொன்னுசிவா,ராகவன், கார்த்திகேயன், தினேஷ்குமார்,செல்வகுமார், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2640 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளம்பெண் தற்கொலை

பேரையூர்: அயோத்தி தினேஷ்வரன் 26. இவரது மனைவி மகாலட்சுமி 23. இருவருக்கும் காதல் திருமணம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நேற்று முன்தினம் இரவு குடும்ப பிரச்னையில் மகாலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மோதி முதியவர் பலி

கொட்டாம்பட்டி : இந்த ஊரை சேர்ந்த சின்னப்பயல் 80, நேற்று முன் தினம் இரவு சர்வீஸ் ரோட்டில் சென்ற போது டூவீலர் மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தீவிபத்து பலி 3 ஆக உயர்வு

திருமங்கலம்: கப்பலுார் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எதிர்புறம் ரோட்டில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் , டீசல் , பெட்ரோலை டேங்கர் லாரியிலிருந்து திருடி, கள்ளச்சந்தையில் டிரம்களில் வைத்து விற்ற இடத்தில் பிப்., 10 ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரடிக்கல் கணேசன் 40, இறந்தார். காயமுற்ற ஆசைதம்பி 50, விஜயகுமார் 35, கார்த்திக் 24, ஆறுமுகம் 66, ஆகிய 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இதில் ஆசைத்தம்பி பிப்., 11 ல் இறந்தார். நேற்று விஜயகுமார் இறந்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X