பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பிப். 18 - 25 வரை நடக்கிறது

Added : பிப் 14, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் பிப்., 18 துவங்கி 25 வரை நடக்கிறது.கலெக்டர் வினய் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் செயற்கை உபகரணங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க மதிப்பீடு முகாம் நடத்தி ஒரு மாத இடைவெளியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடக்கப்படுகிறது. வாழ்வாதார மேம்பாட்டிற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் இலவச பயிற்சிக்கு மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யவும், வருவாய்த்துறை மூலம் உதவி தொகை வழங்கவும், அடையாள அட்டை பெறவும் இம்முகாம்களில் வழிவகை செய்யப்படும்.மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்டோருக்கு கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 18 காலை 10:00 முதல் மாலை 4:00 மணி, மேலுார் ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 19 காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, கொட்டாம்பட்டி ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 19 பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி, வாடிப்பட்டி ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 20 காலை 10:00 முதல் பகல் 1:00 மணி, அலங்காநல்லுார் ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 20 பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி, உசிலம்பட்டி ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 21 காலை 10:00 முதல் பகல் 1:00 மணி, செல்லம்பட்டி ஒன்றியத்தினருக்கு ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 21 பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி, திருமங்கலம், கல்லுப்பட்டி ஒன்றியத்தினருக்கு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 22 காலை 10:00 முதல் பகல் 1:00 மணி, திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி ஒன்றியத்தினருக்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் பிப்., 22 பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி, மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தினருக்கு மேற்கு மண்டல அலுவலகம், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் பிப்., 24 காலை 10:00 முதல் பகல் 1:00 மணி, வடக்கு மண்டலத்தினருக்கு வடக்கு மண்டல அலுவலகம், சாத்தமங்கலம் மாநகராட்சி அலுவலகத்தில் பிப்., 24, பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி, கிழக்கு மண்டலத்தினருக்கு கிழக்கு மண்டல அலுவலகம், பாம்பன் ரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் பிப்., 25 காலை 10:00 முதல் பகல் 1:00 மணி, தெற்கு மண்டலத்தினருக்க தெற்கு மண்டல அலுவலகம், ஹார்விபட்டி சமுதாய கூடத்தில் பிப்., 25 பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையும் முகாம் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 0452- 252 9695 ல் தொடர்பு கொள்ளலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X