ரோட்டோரம் இறைச்சி கழிவு: நோய் பரவும் அபாயம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் வழியாகச் செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். அதில் இருந்து வரும் துர்நாற்றம் ரோட்டில் செல்வோருக்கு பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுகளில் ஆயிரக்கணக்கான ஈக்கள் பெருகி வருகிறது. இதனால், அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.இதனால், ரோட்டோரத்தில் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட எந்த கழிவுகளையும் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். கழிவுகளைக் கொட்டும் நபரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X