சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவத்தில் தாய், சேய் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், சேய் பலியாயினர்.விக்கிரமங்கலம் அருகே ரெட்டிய பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி சங்கீதா 24. செக்கானுாரணி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கர்ப்பமாக இருந்த சங்கீதா நேற்று காலை 8:00 மணியளவில் விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். பகல் 2:00 மணிக்கு அவரை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4:00 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சங்கீதாவும் இரவு 7:00 மணியளவில் பலியானார். விக்கிரமங்லம் சுகாதார மையத்தில் சரியாக சிகிச்சை வழங்காததால் தாயும் சேயும் பலியாகியுள்ளனர் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X