பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிதோறும் உறுதிமொழி வாசகம்: கல்வித்துறையினர் அதிரடி உத்தரவு

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பள்ளிதோறும் உறுதிமொழி வாசகம்: கல்வித்துறையினர் அதிரடி உத்தரவு

திருப்பூர்:குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில், அனைத்து அரசு பள்ளி சுவற்றிலும், 'பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிமொழி' வாசகத்தை எழுத, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி சார்பில், அனைத்து பள்ளி களிலும், மாணவர்கள் எந்த தடையுமின்றி, பயமின்றி பாதுகாப்பான கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளிகளின் சுவர்களிலும், உறுதிமொழி வாசகத்தை எழுத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் இதற்கான உறுதிமொழி வாசகம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக எங்கள் பள்ளி இருப்பதை உறுதிமொழி அளிக்கிறோம்' போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.உறுதி செய்ய வேண்டும்பள்ளி தலைமை சரியான முறையில் செயலாற்றுகிறது என்பது உறுதி செய்யும் வகையிலான வாசங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தினமும், பள்ளி நேரம் முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் எந்த ஒரு குழந்தையும் இல்லை என்பதை உறுதி செய்து, கடைசியாக பள்ளியை விட்டு வெளியேறும் பள்ளி தலைமைக்கும், ஆரோக்கியமான, சுத்தமான, அச்சுறுத்தல் இல்லாத, கொடுமைப்படுத்துதல் இல்லாத கற்றலுக்கான நல்ல சூழலை உருவாக்கும், பள்ளி தலைமைக்கும் ஆதரவு அளிப்பதாகவும், வாசகங்கள் உள்ளன.
'ஆலோசனை பெட்டி, போக்சோ பெட்டி ஆகியவை பயன்பாட்டில் உள்ளது என்பதையும், அதில் வரும் புகார்களை, கருத்துக்களை உடனே ஆய்வு செய்யும் பள்ளி தலைமைக்கும் ஆதரவு அளிப்பதாக உறுதியளிக்கிறோம்' என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன.
'கண்காணிக்கப்படும்'மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி கூறியதாவது:இந்த வாசகங்கள் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பார்த்து வாசிக்கும்படி எழுதப்பட வேண்டும். நாள்தோறும் பள்ளி வழிபாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்பதால் பள்ளி பாதுகாப்பில் அலட்சியத்தன்மை தவிர்க்கப்படும். கூடவே, தேசிய அவசர கால தொடர்பு - 112, மாநில ஆலோசனை உதவி மையம் - 14417, குழந்தைகளின் உதவிக்காக - 1098, உள்ளிட்ட இலவச எண்களுடன், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, தீயணைப்பு அலுவலகம், பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலர் போன்ற முக்கிய தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202021:03:06 IST Report Abuse
ஆப்பு அத்தோடு குழந்தைகளை நான் திருடமாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், தப்பான வழியில் பாஸ் பண்ண முயற்சிக்க மாட்டேன்னு உறுதி மொழி தினமும் எடுக்கச் சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X