பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்பு :கலெக்டர் திடீர் ஆய்வு

Added : பிப் 14, 2020
Advertisement

பல்லடம்:பல்லடத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, கலெக்டர் ஆய்வு செய்தார்.திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய, 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள், வி.வி.பேட், மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியவை, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்படுகின்றன.ஓட்டு பெட்டி வைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறை, மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டு, 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், கேமரா கண்காணிப்பில் உள்ளது.பல்லடம் தாலுகா அலுவலகம் வந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், 'ஸ்ட்ராங் ரூமில்' ஆய்வு மேற்கொண்டார். அந்த அறை, கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் செயல்படும், அரசு பொது இ--சேவை மையத்தில் இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X