பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு பொருள் தயாரிக்க இலவச மின்சாரம் வேணும்'

Added : பிப் 14, 2020
Share
Advertisement

திருத்தணி:'அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை தயாரிக்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும்' என, மின் நுகர்வோர் கூட்டத்தில் ஒருவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

திருத்தணி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர் கனகராஜன் தலைமையில் நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம் மின் வாரிய மேற்பார்வையாளர் வளர்மதி பங்கேற்று, விவசாயிகள், மின் நுகர்வோர்களின் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

பின், மின் வாரிய பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களிடம் மின்சாரம் தட்டுப்பாடு மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என, மேற்பார்வையாளர் அறிவுறுத்தினார்.

பின், கூட்டத்தில், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர், அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி,சேலை தயாரிக்கும் பெடல் தறி வைத்துள்ளேன். எனக்கு, மாதத்திற்கு, 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என, கோரிக்கை மனு கொடுத்தார். அதே போல், விவசாயிகள், புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் மனுக்கள் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X