பொது செய்தி

தமிழ்நாடு

வன்னியர் சங்க பொதுக்குழு

Added : பிப் 14, 2020
Advertisement
 வன்னியர் சங்க பொதுக்குழு

திண்டிவனம்:விழுப்புரம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏழுமலை, கருணாநிதி, துணை பொதுச்செயலர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மலர்சேகர், மாவட்ட செயலர்கள் சம்பத், பெருமாள், திண்டிவனம் நகர செயலர் பால்பாண்டியன் ரமேஷ், வன்னியர் சங்க நகர செயலர் ரவி, முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், முன்னாள் மாவட்ட செயலர் பிரபு, வழக்கறிஞர் சம்பத், ஊடக பேரவை செயலர் மதி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் சங்க மாநாட்டில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் திரளாக பங்கேற்பது. உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிடுவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X