பிரதமரின் பென்ஷன் திட்டம் வங்கி கிளை மாற்றுவதில் சிக்கல்

Added : பிப் 14, 2020
Advertisement

பல்லடம்:நாடு முழுவதும் உள்ள ஏழைகள் பயன்பெறும் வகையில், பிரதமர் மோடி, கடந்த 2015ம் ஆண்டு, பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அமைப்பு சாராத துறைகளில் வேலை பார்ப்பவர்கள், ஓய்வு காலத்துக்குப்பின், மாதம் ஆயிரம் முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும். இதற்காக, குறிப்பிட்ட காலத்துக்கு, தேவைப்படும் பென்ஷன் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும், பிரீமியம் தொகை செலுத்தி வரவேண்டும்.பென்ஷன் திட்டத்தில், 18 முதல் 40 வயது வரையிலான, வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் இணையலாம். வங்கி கணக்கு எங்கு உள்ளதோ, அந்த வங்கி கிளையில், பென்ஷன் திட்ட விண்ணப்பம் பெற்று, திட்டத்தில் இணைய முடியும். திட்டத்தில் இணைந்த ஒருவர், வங்கியின் சேவை குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, வேறு வங்கிக்கு பென்ஷன் திட்டத்தை மாற்ற நினைத்தால், அது இயலாத ஒன்றாக உள்ளது.பல்லடத்தில் உள்ள ஒரு வங்கி கிளை அலுவலரிடம் கேட்டதற்கு, 'பிரதமரின் பென்ஷன் திட்டத்தின் கீழ், எந்த வங்கியில் நினைக்கிறீர்களோ அதே வங்கியில் தான் திட்டத்தை தொடர முடியும். திட்டத்தை, வேறு வங்கிக்கு மாற்றுவதற்கான வழி முறை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை' என்றனர்.பயனாளிகள் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வங்கிக்கு பென்ஷன் திட்டத்தை மாற்றும் வசதியை, வங்கி அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X