பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் 'காட்பாதர்' காட்வின்

Added : பிப் 14, 2020
Advertisement

மதுரையில் ரேடியோ சிட்டியின் மதுரை சிட்டிசன் விருது வழங்கும் விழாவில் மதுரையை சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தினமலர் ஊடக உதவி வழங்க, கரூர் வைஸ்யா வங்கி இணைந்து வழங்கியது. விருது பெற்றவர்கள் இங்கே அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.மதுரை அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக, தேசிய மாணவர் படை அலுவலராக சாதனைகளை நோக்கி பயணிக்கிறார் மாணவர்களின் காட்பாதர் என்று போற்றப்படும் காட்வின். ஆசிரியர் காட்வின் பேசுகிறார்.''சாதிக்கும் எண்ணம் என் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என நினைப்பேன். சமீபத்தில் கூட டேக்வாண்டோ சாதனை முயற்சியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 411 'கிக்ஸ்' செய்து என் மாணவர்கள் கின்னஸில் இடம் பிடித்தனர். தேசிய 'கார்ப்' பந்து போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றது இரண்டாவது சாதனை. மாணவ சமூகம் ஒழுக்கமாக இருந்தால் படிக்கவும், சாதிக்கவும் முடியும். குறிப்பாக முடி திருத்துவோர் மாணவர்களுக்கு 'டிசைனர் கட்டிங்' செய்யக் கூடாது, முறையாக முடி வெட்ட வேண்டும் என முகநுாலில் பதிவு செய்தேன். இந்த தகவல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல பலன் கொடுத்துள்ளது.ஒரு வெற்றியை பார்த்து சந்தோஷப்படக் கூடாது, அடுத்த வெற்றிகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை சிட்டிசன் விருது ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.இவரை வாழ்த்த 94435 01657.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X