சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல் இயந்திரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி காயம்

Added : பிப் 14, 2020
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி காயமடைந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் ஐயப்பன், 35; அதே ஊரைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுக்கச் சென்றார்.அங்கு நெல் அறுக்கும் இயந்திரத்தில் ஐயப்பனின் வலது கால் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அவரது மனைவி அலமேலு, 31; கொடுத்த புகாரின் பேரில் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் மேலத்தாழனுாரைச் சேர்ந்த வீரன், 38; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X