சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நியாய விலை கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Added : பிப் 14, 2020
Advertisement
 நியாய விலை கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கம்மவார்பாளையம்:கம்மவார்பாளையம் கிராமத்தில், முறையாக பொருட்கள் வழங்க கோரி, நியாய விலை கடையை முற்றுகையிட்டு பூட்டி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடம்பத்துார் ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ளது, இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடை.இந்த கடையில், 375 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடையில், பெண் விற்பனையாளர் ஒருவர் மட்டும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த கடைக்கு, எடையாளர் இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை வேலைக்கு வைத்து விற்பனையாளர், பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி வருகிறார்.இந்த கடையில் மாதந்தோறும் அரிசி, மண்ணெண்ணெய், எண்ணெய், பருப்பு போன்ற பொருட்கள் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால், ஆத்திரம்அடைந்த, 75க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, கடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணவாள நகர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேச்சு நடத்தினர். மேலும், கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் முறையாக பொருட்கள் வழங்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து, கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.இதுகுறித்து விற்பனையாளர் ஆனந்தியிடம் கேட்ட போது, 'நியாய விலைக் கடைக்கு குறைவாகவே பொருட்களை அரசு சார்பில் வழங்கப்படுவதால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்க முடியவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X