சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவலூர்பேட்டை சந்தை, 17 ம் தேதி மறுஏலம்

Added : பிப் 14, 2020
Advertisement
 அவலூர்பேட்டை சந்தை, 17 ம் தேதி மறுஏலம்

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டையில் நேற்று நடந்த வார சந்தை ஏலத்தில் யாரும் ஏலம் கேட்காததால் ரத்து செய்யப்பட்டு, மறு ஏலம் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் பெரிய குளக்கரை பகுதியில் வாரம்தோறும் புதன்கிழமை அன்று வார சந்தை நடைபெறுகிறது. சந்தையில் காய்கறி, மளிகை மற்றும் ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறும்.இதற்கு சுங்க வரி வசூலிக்க உரிமம் வழங்குவதற்கான ஏலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு 32 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.இந்த ஆண்டுக்கான ஏலம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. கிராம ஊராட்சி பி.டி.ஓ., தேவராஜன் தலைமை தாங்கினார்.
துணை பி.டி.ஓ.,க்கள் சுரேஷ்குமார், சுப்ரமணியன், ஜெய்சங்கர், குமார், நடராஜன், ஜெகன்னாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.ஏலம் துவங்கியதும், அரசு தரப்பில், 30 லட்சம் ரூபாயாக ஆரம்பக் கேள்வியுடன் ஏலம் துவங்கியது. ஆனால், தொடர்ந்து ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு ஏலம் வரும் 17ம் தேதி நடைபெறும் என பி.டி.ஓ., தேவராஜன் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X