பொது செய்தி

தமிழ்நாடு

'சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்'

Added : பிப் 14, 2020
Advertisement

கும்மிடிப்பூண்டி:'தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்' என. ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், அதன் சேர்மன் சிவகுமார் தலைமையில் நடந்தது.துணை சேர்மன் மாலதி, பி.டி.ஓ.,க்கள் சாமிநாதன், குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார் பங்கேற்றார்.

ரவிக்குமார் (மா.கம்யூ.,): கும்மிடிப்பூண்டியில், சுற்றுச்சூழல் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகையால், போலீசார், சுற்றுச்சூழல் அலுவலர்கள், கண்டிப்பாக கூட்டத்தில் பங்கேற்று நம் புகார், கோரிக்கை மீது பதிலளிக்க வேண்டும். கரி ஏற்றி வரும் கனரக லாரிகளால், குருவராஜகண்டிகை - சிறுபுழல்பேட்டை இடையோன 1.5 கி.மீ., சாலை, புதை குழிபோல் மாறியுள்ளது. உடனடியாக தரமான சாலை அமைக்கப்பட வேண்டும்.

சங்கர் (பா.ம.க.,): சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் நிறுவ வேண்டும். கலெக்டர் அறிவித்த 'பசுமை கும்மிடிப்பூண்டி' திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்.

உஷா (சுயே.,): சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம் ஊராட்சிகளில், தண்ணீர் பற்றாக்குறைக்காக, கூடுதலாக, ஆழ்துளை கிணறு, குழாய் அமைக்க வேண்டும். சுண்ணாம்புகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.

அமலா (தி.மு.க.,): ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் பிரித்வி நகர், நேதாஜி நகர் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர், இந்து, கிறிஸ்துவ மக்களுக்கு சுடுகாடு, இடுகாடுக்கான இடங்களை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

ரவக்கிளி (அ.தி.மு.க.,): ஆரம்பாக்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக மின் பிரச்னை இருந்து வருகிறது. தற்போது, மின் பற்றாக்குறை மேலும் அதிகரித்து, ஒரு நாளில், 10 மணி நேரம் மட்டுமே, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிட்டிபாபு (தி.மு.க.,): மாதர்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள, 25 கிராம மக்கள் பயனடையும் வகையில், கவரைப்பேட்டையில் இருந்து, இரவு, 10:00 மணியளவில், அரசு பஸ் இயக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன், பி.டி.ஓ., தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.கூட்டத்தில், திட்டங்கள், செலவுகள், அனுமதி என மொத்தம், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X