அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,- அ.தி.மு.க.,வை பா.ஜ., வீழ்த்தும்: புதிய மாவட்ட தலைவர் கலிவரதன் 'ஆரூடம்'

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

செஞ்சி:'2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை வீழ்த்தும் கட்சியாக பா.ஜ., இருக்கும்' என மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று செஞ்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021 சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., இதுவரை எந்த தேர்தலிலும் எடுக்காத ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது. 2021ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்தில் திட்டமிட்டு புதிதாக மாவட்ட தலைவர்களை நியமித்துள்ளனர்.திரிபுராவில் இதே போல் திட்டம் வகுத்து 3 ஆண்டுகளில் நிறைவேற்றினோம். மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் நிர்வாகிகளை தேர்வு செய்து, பூத் அளவில் பா.ஜ.. கொடிகளை பறக்க வைப்போம்.ஒவ்வொரு ஊரிலும் 25க்கும் மேற்பட்ட தீவிர தொண்டர்களை உருவாக்கி கட்சியை பலப்படுத்தவும், 2021 தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., வை வீழ்த்தும் வகையில் பா.ஜ., பலத்தை உயர்த்துவோம்.தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற போது பா.ஜ., மற்றும் மோடியை ஒழிப்பது எனது கடமை என கூறினார். அப்போதே பா.ஜ., தமிழகத்தில் வளர்ந்து விட்டது என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது.இவ்வாறு மாவட்ட தலைவர் கலிவரதன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202007:47:31 IST Report Abuse
Balasubramanian A. பா.ஜ.பா. தலைவர்கள் தங்கள் பேச்சை சற்று குறைத்து மக்கள் தொண்டிலே ஈடுபட்டு கட்சியை வளர்க்க வேண்டும். இதை அவர்கள் தங்களது தோழமை இயக்கமான ஆர்.எஸ்.எஸிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X