பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகள்...திருவள்ளூர்

Added : பிப் 14, 2020
Advertisement

மாணவியர் விழிப்புணர்வு பேரணி

திருத்தணி: திருவள்ளூர் அடுத்த, கொழுந்தலுார் பகுதியில் இயங்கி வரும், திருமுருகன் அறிவியல் மற்றும் கலை கல்லுாரி நிர்வாகம் சார்பில், திருத்தணி நகராட்சியில், நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடத்தப்படுகிறது.அதில் ஒரு பகுதியாக, நேற்று காலை, திருத்தணி- - அரக்கோணம் சாலை, முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இருந்து, கல்லுாரி மாணவியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தை, திருத்தணி டி.எஸ்.பி., சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில், 75க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி, பிளாஸ்டிக் கவர் தவிர்ப்போம், சுகாதாரம் காப்போம் என, விழிப்புணர்வு கோஷம் எழுப்பியவாறு, அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை வழியாக, நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.மேலும், மாணவியர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

பாலாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி

திருவள்ளூர்: திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், வியாழக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நேற்று காலை, மதியம் நடந்தது. மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார். ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு வேளைகளில், ஆரத்தி நடந்தது.

இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம் மஹா மங்கள ஆரத்தியும், இரவு ஸ்வஸ்தி பூஜை ஆகியன நடந்தது.

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவுக்கு, பாலாபிஷேகம் நடந்தது. மதியம் மற்றும், மாலையில் ஆரத்தி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X