பொது செய்தி

தமிழ்நாடு

நிறம் மாறிய நிலத்தடி நீர்: பல்லடம் விவசாயிகள் அதிர்ச்சி

Added : பிப் 14, 2020
Advertisement
 நிறம் மாறிய நிலத்தடி நீர்: பல்லடம் விவசாயிகள் அதிர்ச்சி

பல்லடம்:கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையத்தில், சாயக்கழிவு நீர் பாதிப்பு காரணமாக நிலத்தடி நீர் வண்ணம் கலந்து வெளியேறுகிறது.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:ஏற்கனவே அளித்த புகார் அடிப்படையில், ஒரு சில மாதங்களாக, சாயக்கழிவு நீர் பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது.
தற்போது மீண்டும், சிலர் முறைகேடாக சாயக்கழிவு நீரை திறந்து விட்டு வருகின்றனர். அதனால், நிலத்தடி நீர் நுங்கும் நுரையுடனும் நிறம் மாறி வருகிறது.தென்னைகள் முற்றிலும் வறண்டு போய், காய்கள் பிடிக்காமல் உள்ளன. விவசாய தொழிலுக்கு மட்டுமன்றி, கால்நடைகள் வளர்ப்பதற்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வந்தோம். நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்ததால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து புகார் அளித்தால், உடனே மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிடுவதும், தண்ணீர் மாதிரி சேகரித்து செல்வது மட்டுமே வாடிக்கையாக உள்ளது. பெரிய அளவிலான நடவடிக்கை இல்லாததால், சில ஆலைகள் மீண்டும் அதே தவறை செய்கின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X