சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 மணி நேரம் உயிருக்கு போராடிய பீஹார் வாலிபரை மீட்ட ரயில்வே போலீசார்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

திருவாலங்காடு:விரைவு ரயிலில் பயணம் செய்த போது, பீஹார் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து, படுகாயத்துடன், 14 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை, ரயில்வே போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சென்னை சென்டரலில் இருந்து, நேற்று முன்தினம், 7:00 மணிக்கு, பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, மனேஜ்குமார், 26, என்பவர், பயணம் செய்தார்.முன்பதிவில்லா ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மனேஜ்குமார் படியோரம் நின்றுக் கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இரவு, 8:00 மணியளவில், விரைவு ரயில், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சென்ற போது, பீஹார் வாலிபர் மனேஜ்குமார் ரயிலில் இருந்து தவறி விழுந்து, தண்டவாளம் அருகே உள்ள செடிகள், முட்புதர் இடையே படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று, காலை, 10:00 மணிக்கு, அவ்வழியாக மாடுகளை ஒட்டிச் சென்ற அப்பகுதி மக்கள், செடிகள் நடுவில் வாலிபர் காயங்களுடன், உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு, திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.ரயில்வே போலீசார், '108' ஆம்புலன்ஸ் சேவை உடன் வந்து, 14 மணி நேரம் உயிருக்கு போராடிய பீஹார் வாலிபரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது, மனேஜ்குமார் அவசரப்பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே போலீசார் தொடர்ந்து வாலிபரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X