பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுக்தா அணையின் நீர்மட்டம் குறைந்தது

Added : பிப் 14, 2020
Advertisement
 மணிமுக்தா அணையின் நீர்மட்டம் குறைந்தது

கள்ளக்குறிச்சி:சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 38 நாட்களான நிலையில் நீர்மட்டம் 25 அடியாக குறைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 36 அடி (736 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்டதாகும். பருவ மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைத்து, விவசாய பாசனத்திற்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்த அணையை நம்பி புதிய மற்றும் பழைய பாசனம் மூலம் 5,493 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பருவ மழை பொய்த்ததால் அணை தண்ணீரின்றி முற்றிலும் வறண்டது. இதனால் அணையையொட்டியுள்ள பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, அகரகோட்டாலம், வாணியந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வட கிழக்கு பருவ மழையினால் அணையின் நீர்மட்டம் 30.60 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அணையின் பாசன கால்வாய் வழியாகவும், அணையையொட்டி உள்ள கிராமபுற ஏரிகள் நிரம்பும் வகையில் மணிமுக்தா ஆற்றில் ெஷட்டர் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 38 நாட்கள் முடிவடைந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 25 அடியாக நேற்று இருந்தது. வரும் 25ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X