தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க கூடாது!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தனியார் மருத்துவமனைகளில் 'கொரோனா' சிகிச்சை அளிக்க கூடாது!'

Added : பிப் 14, 2020
Share
 'தனியார் மருத்துவமனைகளில் 'கொரோனா' சிகிச்சை அளிக்க கூடாது!'

திருப்பூர்:'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு, எக்காரணத்தை முன்னிட்டும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டாம்,' என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.'கொரோனா' வைரஸ் அச்சம் காரணமாக, சீனாவில் இருந்து, திருப்பூர் மாவட்டம் திரும்பிய, 27 பேரை, சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.தவிர, அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறமிருக்க, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, சீனாவில் இருந்து வந்த பயணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சீனாவில் இருந்து சமீபத்தில் வந்தவர்கள் எவரேனும் சிகிச்சை பெற்றால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கக் கூடாது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X