பொது செய்தி

தமிழ்நாடு

சேதம்! காணை வட்டார வேளாண் விரிவாக்க மையம்...ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement
 சேதம்!  காணை வட்டார வேளாண் விரிவாக்க மையம்...ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை

விழுப்புரம்:காணை வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டடம் சேதமடைந்துள்ளதால், அலுவலர்கள் அச்சத்தில் பணிபுரியும் நிலை நீடித்து வருகிறது. மேலும், இங்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை சார்பில் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வட்டார வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் அடுத்த காணையில் வட்டார வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரு வேளாண் உதவி இயக்குநர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையத்தின் கீழ் 62 கிராமங்களைச் சேர்ந்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன் பெறுகின்றன.இந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நெல், மணிலா, கம்பு, உளுந்து, சிறுதானியங்கள், உயிர் உரங்கள், நுண் உரங்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விவசாய இடுபொருட்கள் இங்கு இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வேளாண் விரிவாக்க மையம் தற்போது, சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர் ஒழுகுவதால், விவசாய இடுபொருட்கள் நனைந்து சேதமடைந்தும், விதைகள் முளைத்துவிடும் அவல நிலையும் உள்ளது.சேதமடைந்த இந்த கட்டடத்தால், அலுவலர்கள் அச்சத்தில் பணிபுரிகின்றனர்.
இதேபோன்று, சிறிய கட்டடத்தில் செயல்படும் மையத்தில், கோப்புகளை வைக்க போதி இடவசதியின்றி, அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.மேலும், இங்கு தோட்டக்கலை, விதைச்சான்று துறை, வேளாண் விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்டவைகள் தனித்தனி இடங்களில் உள்ளன. இதனால், வேளாண் துறை சார்ந்த உதவிகள் பெறுவதற்கு விவசாயிகள் அலைந்து திரிகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சில வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.இதேபோன்று, காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் மூலம், வேளாண் துறை சார்ந்த உதவிகளை விரைந்து பெறமுடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X